சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப்பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் குட்கா, பான் மசாலா பொருட்கள் மறைமுகமாக கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாம்பரம், பல்லாவரம், திருநீர்மலை, குரோம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பான் மசாலா, புகையிலைப்பொருட்கள் இரவு நேரங்களில் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தாம்பரம் உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சார்லஸ் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் கண்ணியப்பன், காவலர் கார்த்திகேயன், தலைமை காவலர் வீராசாமி உள்ளிட்டோர் இரவு ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த ஐந்து நபர்கள் டாடா ஏஸ் வாகனத்தில் பூண்டு மூட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தனர்.