தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம் - போலீஸ் தீவிர விசாரணை - நுடன் சாய் பிரகீத் சிந்தா

சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர் மாயமான விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்
மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்

By

Published : Sep 28, 2021, 8:02 AM IST

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நுடன் சாய் பிரகீத் சிந்தா(21) சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு மருத்துவப் படித்து வருகிறார்.

இன்று (செப்டம்பர் 27) முதல் தேர்வுகள் தொடங்கும் நிலையில், அவரை நேற்றிரவு கல்லூரி விடுதியில் பெற்றோர் அழைத்து சென்று விட்டுள்ளனர்.

இதனையடுத்து இரவு 9 மணியளவில் சாய் பிரகீத் கல்லூரி விடுதியில் இருந்து வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. வெளியேச் சென்று நெடு நேரமாகியும் சாய் பிரகீத் விடுதிக்குத் திரும்பாததால் விடுதி நிர்வாகம் சார்பில் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து தனது மகனை காணவில்லை எனவும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் மாணவன் சாய் பிரகீத்-ன் தந்தை ஹரிநாத் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கல்லூரி விடுதிக்குச் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மாணவன் சாய் பிரகீத் "நான் சுற்றுலா செல்கிறேன், என்னை யாரும் தேட வேண்டாம். இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் என பிறந்த நாளன்று வந்து அனைவரையும் சந்திக்கிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது.

எனினும் அது மாணவர் சாய் பிரகீத் எழுதிய கடிதம்தானா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மகனை கொலை செய்தவர்களை பழிதீர்க்க நாட்டு வெடிகுண்டுடன் அலைந்த தந்தை

ABOUT THE AUTHOR

...view details