மதுரை: முத்துப்பட்டி அருகே ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெயபிரசாத் (10). ஆனையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெயபிரசாத்துக்கு பள்ளியின் சார்பாக இணையவழியில் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், அதில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கேம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதற்காக தந்தை ரஞ்சித்குமார் மகனை கண்டித்துள்ளார்.