டெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் காவல் அலுவலர் ரகு கணேஷுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
"இது மிக மோசமான வழக்கு. எனவே, இவ்வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நீங்கள் சில காலமாவது சிறையில் இருக்க வேண்டும்" என்று நீதிபதி சரண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.