தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு - சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்டு 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு

By

Published : Jul 29, 2021, 7:47 AM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களும் தந்தை மகனுமான ஜெயராஜ் - பென்னிக்ஸ் 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சமயதுரை உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு: காவலர்களுக்குப் பிணை மறுப்பு!

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய காவலர்கள் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details