தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சூப்பர் மார்கெட்டில் ரூ.17 ஆயிரம் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு - சிசிடிவி காட்சி வெளியீடு

தாம்பரம் அருகே சூப்பர் மார்கெட்டின் மேற்கூரையை துளையிட்டு கல்லாப் பெட்டியில் இருந்த 17,000 ரூபாய் பணத்தை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மேற்கூரையை துளையிட்டு சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு
மேற்கூரையை துளையிட்டு சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு

By

Published : May 20, 2022, 10:54 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் சுப்பிரமணியன் (52) என்பவருக்கு சொந்தமான எஸ்.மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு (மே.19) கடையை பூட்டி விட்டு சென்ற சுப்பிரமணியன், இன்று (மே.20) காலை மீண்டும் வந்து பார்த்த போது கடையின் மேற்கூரையை துளையிட்டு கல்லாப் பெட்டியில் இருந்த 17,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் கடைக்குள் அடையாளம் தெரியாத நபர் கல்லாப் பெட்டியை ஆராய்ந்து பார்த்தார். அதிலிருந்த பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சி

இந்நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையின் மிக நீளமான பாலம்-திறந்து வைத்தார் முதல்வர்

ABOUT THE AUTHOR

...view details