வடசென்னையின் பிரபல ரவுடியான மாலைக்கண் செல்வத்தின் வலது கரமாக இருந்தவர் கல்வெட்டு ரவி. பின்னர் பாரிமுனையில் ரவுடி நித்தியானந்தத்தை கொலை செய்தபின், வடசென்னையில் ரவுடியாக கல்வெட்டு ரவி தனியாக இயங்கி வந்தார். ரவி மீது சென்னை முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அண்மையில் ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்தார்.
பாஜக பிரமுகர் ரவுடி கல்வெட்டு ரவி கைது! - ரவுடி கல்வெட்டு ரவி கைது
சென்னை: அண்மையில் பாஜகவில் இணைந்த பிரபல ரவுடியான கல்வெட்டு ரவியை ஆந்திராவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் கல்வெட்டு ரவி ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. அதனடிப்படையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்த கல்வெட்டு ரவி, ஆந்திராவில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக வடசென்னை தனிப்படைக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆந்திரா விரைந்த தனிப்படையினர் அங்கு வைத்து கல்வெட்டு ரவியை கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் இளைஞர் அடித்துக்கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை!