புதுச்சேரியைச் சேர்ந்தவர் ரவுடி ஜெரோம் (33). இவர் மீது புதுச்சேரியில் நான்கு கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில், ரவுடி அன்பு ரஜினியை ஜெரோம் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து புதுச்சேரியில் கொலை செய்த வழக்கில் கைதாகினர்.
பிணையில் வெளிவந்த ரவுடி ஜெரோம் சென்னை வெட்டுவாங்கனி நியூ கணேஷ் நகர் பகுதியில் தலைமறைவாக வசித்து வந்துள்ளார். ஜெரோம் பதுங்கியிருப்பதை தெரிந்துகொண்ட அன்பு ரஜினியின் கூட்டாளிகள், ஜெரோமை நோட்டமிட்டனர். பின்னர் எட்டுபேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் ரவுடி ஜெரோமை ஓட ஓட விரட்டி சரமாரியாக ஆயுதங்களைக் கொண்டு வெட்டி விட்டு தப்பியோடினர்.