திருநெல்வேலி: சிறையில் கைதி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் வைத்து கைதி கொலை; உறவினர்கள் சாலை மறியல்! - relatives road picketing protest
சிறையில் சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்ட கைதி முத்துவின் உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதித்தது.
relatives road picketing protest of a inmate killed inside jail in palayamkottai
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி முத்து மனோ சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டு திருநெல்வேலி - நாங்குநேரி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அவரின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.