தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ரயில் சேஸிங்....3.5 டன் அரிசி பறிமுதல் - Ration rice seized train

ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3.5 டன் அரிசியை நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பறிமுதல்செய்தார்.

ரயிலை துரத்திச் சென்று 3.5டன் அரிசி பறிமுதல்
ரயிலை துரத்திச் சென்று 3.5டன் அரிசி பறிமுதல்

By

Published : Jun 29, 2021, 11:56 PM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன் ரயில்வே கேட் உள்ளது. இங்கே மதியம் 2 மணி அளவில் ஆந்திராவுக்கு செல்லும் பயணிகள் ரயில் வருகிறது.

இந்த ரயிலில் தினமும் சுமார் மூன்று டன்னுக்கும் மேற்பட்ட அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு 3.5 டன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், உதவியாளர் அருள் பாண்டியன், கிருஷ்ணன் செல்வதற்குள் ரயில் சென்றுவிட்டது.

இருப்பினும் ரயிலை சுமார் 15 கிலோமீட்டர் பின்தொடர்ந்து பச்சூர் ரயில்வே கேட் அருகே நிறுத்தி பரிசோதனை செய்ததில் 3.5 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த கடத்தல் அரிசியை நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details