ராமநாதபுரம்: மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு - ராமநாதபுரம் செய்திகள்
தேவிப்பட்டினம் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர், எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து நிலையில், நீச்சல் சரியாக தெரியாத மீனவர், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவிப்பட்டினம் அருகே இன்று காலை ஆறு மணியளவில், முத்து ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் தனக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீன்களைப் பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் கடலில் விழுந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு சரியாக நீச்சல் தெரியாததால், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மீனவரின் உடலை சக மீனவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக தேவிப்பட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.