தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

Defamation case - நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா

இந்து சமய அறநிலைத் துறை (Hindu Religious and Charitable Endowments Department) அலுவலர்களை அவதூறாகப் பேசியதற்காக ஹெச். ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இன்று (நவ.15) அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஹெச். ராஜா
ஹெச். ராஜா

By

Published : Nov 15, 2021, 8:26 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூரில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ஹெச். ராஜா கலந்துகொண்டார்.

அப்போது, இந்து சமய அறநிலைத் துறை அலுவலர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசியதாகத்தெரிகிறது.

ஹெச்.ராஜா மீதான அவதூறு வழக்கு

இதுதொடர்பாக ஹெச். ராஜா மீது விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விருதுநகர் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரிலுள்ள நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் நடுவர் எண் 2 அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரம்வீர், ஹெச். ராஜாவுக்கு அக்டோபர் மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இதனிடையே, இன்று (நவ.15) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது ஹெச். ராஜா நேரில் ஆஜரானார். முன்னதாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பெரிய பெருமாள் சந்நிதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.

இதையும் படிங்க:Woman IPS officer sexual assault case: பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு - நவ.20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details