நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017ஆம் ஆண்டு புகுந்த ஒரு கும்பல் காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக கோத்தகிரி காவல் துறையினர் சயான், மனோஜ், மனோஜ் சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தேடப்பட்டுவந்த நிலையில், சாலை விபத்தில் மரணமடைந்தார். இதேபோல் எஸ்டேட்டின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து சயானின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்தில் சிக்கி, அவரது மனைவி, குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து வழக்கில் தொடர்புடைய நபர்கள் இறந்ததால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சர்ச்சையாகி பேசுபொருளாக மாறியது.
விசாரணை
ஆனால் கோத்தகிரி காவல் துறையினர் சாதாரண கொலை, கொள்ளை வழக்கு போல் விசாரித்து கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு முறையாக விசாரிக்கபடவில்லை எனவும், பல அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக சர்ச்சை கிளம்பியதால் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என திமுக அறிவித்தது. திமுக ஆட்சி அமைத்தவுடன் மீண்டும் கோடநாடு வழக்கு தூசி தட்டப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் கோடநாடு வழக்கில் சசிகலா, இளவரசி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என விசாரணை அலுவலரான, கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மீது குற்றம்சாட்டி வந்த நிலையில், பாலசுந்தரம் நீலகிரி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
எழுப்பப்படும் கேள்விகள்