சென்னை: பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்களை கடுமையாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சேத்துப்பட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்துக் காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் காரில் சென்றுள்ளார். அந்த வாகனத்தை நிறுத்திய காவலர்கள், அப்பெண்ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
உடனே அந்தப் பெண் அவரது அம்மாவுக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பெண்ணின் தாயார், என்னவென்று விசாரிக்காமல், ”நான் வழக்கறிஞர், என்னால் அபராதம் செலுத்தமுடியாது” என போக்குவரத்துக் காவலர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.