திருவாரூர்: தியானபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பேண்டு இசைக்குழு நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் திவ்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
திருமணமாகி 7 மாதம்தான்... கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை - திருவாரூர் மாவட்ட செய்திகள்
திருவாரூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Pregnant women suicide at thiyanapuram
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாகரன் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் திவ்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.