கோயம்புத்தூர்:திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30), கூலித்தொழிலாளியான இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த அமுதா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார். கருப்புச்சாமிக்கும், அமுதாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.
உறவினருடன் திருமணம்
அமுதா திண்டுக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கருப்புச்சாமி தாசநாயக்கன்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கருப்புச்சாமி கடந்த 25 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நெகமம் அருகேயுள்ள ஜக்கார்பாளையத்தில் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அம்சவேணி (24) என்ற உறவினர் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
சென்ற ஜூன் 14ஆம் தேதி, கருப்புச்சாமி அம்சவேணியை அழைத்துச் சென்று பெதப்பம்பட்டியில் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அம்சவேணியின் பெற்றோர் கருப்புச்சாமியிடம் அவருடைய முதல் மனைவி அமுதாவிடம் விவாகரத்து செய்து கையெழுத்து வாங்கி வரச்சொல்லி உள்ளனர்.