மதுரை:மதுரை அண்ணாநகர் செண்பகத்தோட்டம் மீனவர் சங்க கட்டடம் அருகே அதிகாலை பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி குருவி விஜய் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள், காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர்.
காவல் துறையினரைக் கண்டதும், குருவி விஜய்யும் அவரது கூட்டாளிகளும் காவலர்களை தாக்க முயன்றனர். தங்களை தற்காத்துக்கொள்ள காவல் துறையினர் ரவுடி குருவி விஜய்யின் காலில் சுட்டனர்.