தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிறுமிக்கு லவ் டார்ச்சர்; இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை - அரக்கோணத்தில் பள்ளி

சென்னை பாண்டிபஜாரில் ஒருதலை காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த விவகாரத்தில் இரண்டு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுமிக்கு லவ் டார்ச்சர்
சிறுமிக்கு லவ் டார்ச்சர்

By

Published : Nov 10, 2022, 6:57 AM IST

சென்னை: பாண்டிபஜாரில் தாத்தா வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமியை காதலிக்க வலியுறுத்தி, இளைஞர்கள் இருவர் சிறுமி வீட்டின் அருகே சென்று தொல்லை கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான புகாரில் பாண்டிபஜார் போலீசார் அரக்கோணத்தை சேர்ந்த மேகவர்ணம், சரவணன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமி அரக்கோணத்தில் பள்ளியில் பயிலும் போது, மேகவர்ணம் காதலிக்க சொல்லி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், அதனால் சென்னை பாண்டிபஜாரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி சிறுமி பள்ளியில் படித்து வரும் நிலையில், அவர்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சிறுமியை தேடி வந்து காதலிக்க சொல்லி வற்புறுத்தியதும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களை கடத்தினாரா வடமாநில இளைஞர்? - மாணவரின் தந்தை கைது

ABOUT THE AUTHOR

...view details