ராஜஸ்தானின் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி சிறுமி காணாமல்போனதாக அருகில் உள்ள இடவா காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சிறுமியைத் தேடிவந்தனர். தேடப்பட்ட நிலையில், சிறுமி ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள போகாரன் என்ற பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.