தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நண்பனை கொலை செய்ய முயற்சி...இளைஞர் கைது - கத்தியால் ஓட ஓட வெட்டி

திருச்சியில் முன் விரோதம் காரணமாக நண்பரை ஓட ஓட விரட்டிச்சென்று கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இரவல் பைக்கை திருப்பி வாங்கிய நண்பனை வெட்டிய நண்பன்
இரவல் பைக்கை திருப்பி வாங்கிய நண்பனை வெட்டிய நண்பன்

By

Published : Nov 7, 2022, 11:12 AM IST

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே ரெங்கா நகரை சேர்ந்த நிகில், தனது நண்பர் அரவிந்த் என்பவரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரவல் கொடுத்த பைக்கை பணத்திற்காக ஒருவரிடம் அடகு வைத்துள்ளார்.

இதனையறிந்த நிகில் அரவிந்திடம் தகராறு செய்து பைக்கை மீட்டு வந்துள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் உள்ள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்த நிகிலை அங்கு வந்த அரவிந்த் கூர்மையான கத்தியால் ஓட ஓட வெட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிகில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் தலைமறைவாக இருந்த அரவிந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் போதைப் பொருள்கள் கலந்த சாக்லேட் விற்பனை..! ஒருவர் கைது...

ABOUT THE AUTHOR

...view details