தர்மபுரி: ஆயுத படை மைதானத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
காவல் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் - பட்டதாரி இளைஞர் கைது!
காவல் உடற்தகுதி தேர்வில் போலி ஆவணம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்த பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
police exam Impersonated teen arrested
இந்த தேர்வில் கலந்து கொண்ட இளைஞரின் நுழைவுச் சீட்டை தேர்வு நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்த போது, அது போலி ஆவணம் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்த தர்மபுரி மாவட்டம் சின்ன முருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார்(21) என்ற பட்டதாரி இளைஞரை இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு காவல் துறையினர் கைது செய்தனர்.