சென்னை:ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் ராஜேஷ். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். ராஜேஷ், ஹோட்டலில் வீணாக குப்பைத் தொட்டியில் போடப்படும் உணவுகளை சேகரித்து தெரு நாய்களுக்கு உணவளித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு (அக்.08) அதே போல் தெருவோரம் உள்ள நாய்களுக்கு உணவளித்து விட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் நாய்களை தாக்குவதை கண்டு அவர்களை தட்டி கேட்டார். அப்போது அங்கிருந்த ஆறு பேர் காவலர் ராஜேஷை கட்டையால் தாக்கி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கலியை பறித்துச் சென்றனர்.