சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அசோக் நகர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் ஜாஃபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (32) என்ற தனியார் மருத்துவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக மருத்துவர் மனோஜ் உறுதியளித்த நிலையில், காதலிக்கும்போது அவரது கடன் தொல்லை, தங்கையின் படிப்பு செலவு என பல்வேறு காரணங்களைக் கூறி பல தவணைகளாக 51 லட்சம் ரூபாய் வரை தன்னிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் வாக்களித்தபடி மருத்துவர் மனோஜ் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் தட்டிக்கழித்து வருவதுடன் தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் வேறு சில பெண்களுடன் பேசிக்கொண்டு தன்னை ஏமாற்றி வருவதாகவும் புகாரில் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.