கரூர்: தென்னிலை அருகே உள்ள மலைக்கோயில் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக தென்னிலை காவல் துறையினருக்கு நேற்று (ஜுன் 14) ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தென்னிலை காவல் ஆய்வாளர் ரமாதேவி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது, சேவல் சண்டையில் ஈடுபட்டதாக சூரியபிரகாஷ் (27), சசிகுமார் (28), மனோஜ் (27), நந்தகுமார் (21), சக்திவேல் (31, சுதாகர் (41), விக்னேஷ் (24), அரவிந்த் (23), சின்னத்தம்பி (29), ஜெகதீஷ் (28), ரஞ்சித் (27), ஆனந்த் (27) உள்ளிட்ட 12 பேரைப் பிடித்து, விசாரித்ததில் சேவல் சண்டையில் பணம் வைத்து சூதாடியதை ஒப்புக்கொண்டனர்.