தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பெண் இறப்பில் சந்தேகம்: காவல் துறை விசாரணை! - etvbharat etvtamil

பரமக்குடி அரசு மருத்துவமனையில் வயிறு வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று (ஜூலை 8) உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரமக்குடியில் பெண் இறப்பில் சந்தேகம்
பரமக்குடியில் பெண் இறப்பில் சந்தேகம்

By

Published : Jul 9, 2021, 2:40 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த பக்கீர் மைதீன், முகம்மது பாத்திமா அவர்களின் மகன் முசாபர் ஒலியுல்லா. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சகினாபீவி (26). இந்த தம்பதியினருக்குக் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவர் வீட்டாருடன் வசித்தார்.

இந்நிலையில் சகினாபீவி கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 70 ஆயிரம் பெற்று திருப்பி தராததால், ஒரு கும்பல் மிரட்டியதாக பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்து விசாரணை நடந்தது. இதனிடையே கடந்த 15 நாள்களாக சகினாபீவி வெளியில் சென்றுவருவதை அந்த கும்பல் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் ஜூலை 2ஆம் தேதி இரவு 8 மணிக்கு அப்பகுதியில் கடையில் பொருள்கள் வாங்க சகினாபீவி வந்தபோது, ஆட்டோவில் வந்த மூன்று பேர் சகினாபீவியை கடத்திச்சென்று வாயில் திரவம் ஒன்றை ஊற்றியதுடன், அவரது அலைபேசியை பிடுங்கி சிம்கார்டை உடைத்து அங்கேயே விட்டுச் சென்றனர்.

இறப்பு குறித்து விசாரணை

இதுகுறித்து சகினாபீவி தனது வீட்டிற்கு வந்து மாமியாரிடம் நடந்ததை கூறியுள்ளார். தொடர்ந்து பரமக்குடி தனியார் மருத்துவமனையில் சகினாபீவி வயிற்று வலியால் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (ஜூலை 8) உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது மாமியார் முகம்மது பாத்திமா கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, சகினாபீவி வாயில் திரவம் ஊற்றிய கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் - வைரல் வீடியோ'

ABOUT THE AUTHOR

...view details