சென்னை: மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் துறையினர் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டு, ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.
பப்ஜி மதன் ஐடியில் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு
காவல் துறை வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், "மதனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கும் எல்லோருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். 'பப்ஜி' விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆபாச வார்த்தைகளைப் பேசி சமூக வலைதளத்தில் பரப்பி வருபவர்களைக் கண்காணித்து வருகிறோம்.