காஞ்சிபுரம் அருந்ததி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மினிசரக்கு வேன் ஒன்றை வைத்துக்கொண்டு காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல வியாபாரத்திற்கு சென்று வந்து விட்டு வாகனத்தை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக ரிவேர்ஸில் வந்த மினி வேன்.. விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை உயிரிழப்பு! - காஞ்சிபுரத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
காஞ்சிபுரம்: மினி வேன் ரிவர்ஸ் வந்ததில் எதிர்பாராதவிதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த வாகன உரிமையாளரின் ஒருவயது குழந்தை தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது.
![எதிர்பாராதவிதமாக ரிவேர்ஸில் வந்த மினி வேன்.. விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை உயிரிழப்பு! எதிர்பாரதவிதமாக ரிவேர்ஸ் வந்த மினி வேன்.. விளையாடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை உயிரிழப்பு..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10576995-thumbnail-3x2-df.jpg)
மேலும் வாகனம் நகராமல் இருப்பதற்காக சக்கரத்திற்கு அடியில் கல் ஒன்றையும் வைத்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் ஒரு வயது குழந்தை சபரீஸ்வரன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சக்கரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்து கல் நழுவியுள்ளது. இதனால் பின்னோக்கி வந்த வேனின் சக்கரத்தில் குழந்தை சிக்கி படுகாயம் அடைந்தது.
பின்னர் குழந்தையை மீட்டு பெற்றொர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
காஞ்சிபுரம்