விழுப்புரம்மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அம்மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிலேயே இன்று(ஆகஸ்ட்10) விஷம் அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர் .
அப்போது மாணவியின் உடலைப்பரிசோதித்த அரசு கல்லூரி மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
விழுப்புரம் அருகே மீண்டும் ஒரு மரணம்... பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை! - பெற்றோர்கள் மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்ததாகவும்
விழுப்புரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Etv Bharat
தற்போது மாணவியின் உடலானது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மாணவிக்குத் திருமண ஏற்பாடு செய்ததாகவும்; ஆனால் மாணவி வேறு ஒருவரை காதலித்து வந்ததாகும் இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கோச்சடையான் பட வழக்கு - லதா ரஜினிகாந்த் மீதான சில மோசடி குற்றச்சாட்டுகள் ரத்து!