தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை சேர்ந்த பாமக பிரமுகரும், பாத்திரக்கடை நடத்தி வந்தவருமான ராமலிங்கம் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கும்பல் படுகொலை செய்தது.
மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
மதமாற்றம் தொடர்பான விவகாரம் என்பதால் இந்த வழக்கானது தேசிய குற்றப்புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 6 பேரை என்ஐஏவினர் தேடி வந்தனர்.