கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (70), வனப்பகுதியில் வியாழக்கிழமை புல் சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒற்றை ஆண் யானை வெள்ளியங்கிரியை தாக்கி தூக்கி வீசியுள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து வனப்பகுதிக்குள் சென்ற வெள்ளியங்கிரி வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் தேடியுள்ளனர்.
அப்போது ஓரிடத்தில் யானை நீண்ட நேரமாக பிளிரியவாறு நின்றுகொண்டிருந்தது தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வெள்ளியங்கிரி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து சத்தம் எழுப்பி யானையை விரட்டிய அவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.