தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு - குண்டர் சட்டத்தில் இருவர் கைது! - old lady harrasmen

சேலம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு
மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

By

Published : Jan 24, 2022, 7:52 PM IST

Updated : Jan 24, 2022, 8:06 PM IST

சேலம் : தாரமங்கலம் பெரிய சோரகை கிராமம் தானாத்தான் வளவு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தங்களது தோட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி விவசாய வேலை செய்து வந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (19), விக்னேஷ் (22) ஆகியோர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

இது குறித்து ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் இருவர் மீதும், காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ.அபிநவ் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தங்கையை மீட்க ஆற்றில் இறங்கிய அண்ணன் உயிரிழப்பு!

Last Updated : Jan 24, 2022, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details