தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பயிர்க்கடன் தள்ளுபடிசெய்ய கையூட்டு கேட்ட அலுவலர்கள்: வந்தவாசியில் விஜிலென்ஸ் விசாரணை!

திருவண்ணாமலை: வந்தவாசி வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளிடம் கடன்களைத் தள்ளுபடி செய்ய அலுவலர்கள் கையூட்டு கேட்டதால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்திவருகிறது.

Breaking News

By

Published : Feb 20, 2021, 1:14 PM IST

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

பின்பு கடந்த 8ஆம் தேதி தமிழ்நாடு அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது. இருப்பினும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கத்தில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அலுவலர்கள் கையூட்டு கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நேற்று மாலை (பிப். 19) 6 மணியளவில் தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணை முடிந்த பின்னரே ஊழியர்கள் கையூட்டுப் பெற்றுள்ளார்களா என்பது குறித்து தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலை.யில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details