தர்மபுரி மாவட்டம், கனிகாரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (21). இவர், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஏப்.23) பகல் பணியை முடித்துவிட்டு விடுதிக்குச் சென்ற பவித்ரா அறையின் கதவை பூட்டிக் கொண்டார்.
இன்று (ஏப்.24) காலை வரை நீண்ட நேரமாகியும், அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சக செவிலியர்கள் கதவைத் திறக்க முயற்சித்தனர். பின்னர் ஜன்னலை உடைத்து பார்க்கும்போது, பவித்ரா மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.