தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நிறைவேறாத காதலால் புதுமணப் பெண் எடுத்த கோர முடிவு! - தாம்பரம் புதுப்பெண் தற்கொலை

பெற்றோர் வற்புறுத்தியதால் காதலைத் துறந்து வேறு நபரை மணமுடித்த பெண் ஒரு மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newly married girl hanged in chennai
newly married girl hanged in chennai

By

Published : Jul 30, 2021, 8:54 AM IST

சென்னை: காதலனுடன் இணைய முடியாத சோகத்தில், புதுமணப் பெண் ஒருவர் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தியா (21) ஒரு மாதத்திற்கு முன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தார். ஆனால், அவரது கணவர் வேலாயுதத்துடன் பிரச்னை ஏற்பட்ட நிலையில், சந்தியா பெருங்களத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே சந்தியா வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சரவணன் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தன் பெற்றோர் வற்புறுத்தியதால் தனது உறவுக்காரரான வேலாயுதத்தை திருமணம் செய்துள்ளர்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அவ்வப்போது சரவணனுடன் சந்தியா பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த சந்தியா வீட்டில் தனி அறையில் இருந்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது

தொடர்ந்து, வெகு நேரமாகியும் சந்தியா கதவை திறக்காத்தால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு அவர் உயிரற்ற நிலையில் பிணமாக தூக்கில் தொங்கியிருந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தொடர்ந்து இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீர்கன்காரனை காவல் துறையினர், சந்தியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாச்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details