தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நெல்லையில் பெண் கொடூர கொலை - நெல்லை பாளையங்கோட்டை பெண் கொலை

நெல்லை அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பெண் கொடூரக்கொலை
நெல்லையில் பெண் கொடூரக்கொலை

By

Published : Mar 16, 2022, 6:24 AM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்தவர் சுடலைக் கண்ணு. இவரது மனைவி மாதா (50). மாதா குளத்து வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 14) வேலை முடிந்து மாதா வீட்டுக்கு வராததால் அவரது கணவர் கவலைடைந்துள்ளார். இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஊருக்கு வெளியே குளம் அருகில் முட்புதரில் மாதா கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாண கோலத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறிய தகவலை கேட்டு சுடலைக் கண்ணு அதிர்ச்சி அடைந்தார்.

முதல் கட்ட விசாரணை

தகவல் அறிந்து அங்கு சென்ற தாலுகா காவல் துறையினர் மாதாவின் உடலை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், மாதாவை மர்ம நபர் யாரோ அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அதாவது, நேற்று மாதா வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு அருகே உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளார். குளித்துவிட்டு வரும் வழியில், அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர், மாதாவை கட்டையால் தாக்கி முட்புதர் உள்ளே இழுத்து சென்றுள்ளதாக தெரிகிறது. மேலும், அவர் அணிந்திருந்த துணியை கிழித்து கை, கால், வாயை கட்டியுள்ளார்.

எஸ்பி நேரில் ஆய்வு

சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களும், தடயவியல் துறையினரும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மோப்ப நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது. கொலை நடந்த இடத்தில் உள்ள பொருட்களைக்கொண்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு, போலீசார் உடலை மீட்டு பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், மதிய வேளையில் ஒரு பெண் கை கால்களை கட்டி மர்மமான முறையில் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லை ரவுடிகள் வரவழைப்பு: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

ABOUT THE AUTHOR

...view details