தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தம்பி மனைவி,குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த கொடூரம் - நத்தம் அருகே தம்பி மனைவி,குழந்தை கொலை

நத்தம் அருகே பாலியல் இச்சைக்கு உடன்படாத தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம்
நத்தம்

By

Published : Apr 3, 2022, 10:28 AM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. சிவக்குமார் அஞ்சலை (வயது 21) என்பவரை திருமணம் செய்து 2 வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று(சனிக்கிழமை) சிவகுமார் புளி வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் அஞ்சலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

தம்பி மனைவி,குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த கொடூரம்

இதற்கு அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்த கருப்பையா, அஞ்சலையின் 2 வயது பெண் குழந்தையையும் கொலை செய்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

தம்பி மனைவி,குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த கொடூரம்

புகை வருவதை பார்த்த பொதுமக்கள் நத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீஸார் விசாரணை நடத்தியர். முதல்கட்ட விசாரணையில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பயிற்சி காவல்துறை அதிகாரி கைது

ABOUT THE AUTHOR

...view details