நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாமக்கல் அருகே அரசுப் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல்மாவட்டம் வெப்படை அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மோடமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயின்று வந்த ரிதுன் என்ற மாணவன் இன்று பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென பள்ளியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் வெப்படை போலீசாருக்கும் ஈரோடு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பின் அங்கு வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் ரிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
TAGGED:
நாமக்கல் செய்திகள்