நாகப்பட்டினம் பெருமாள் கோயில் மேல வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் நாகையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மதியம் கடையை முடித்துவிட்டு வீடு திரும்பிய கணேசன், தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உணவு சாப்பிட சென்றார்.
பின்னர் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.