சென்னை:பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு தாம்பரம், முல்லை நகர் பகுதியில் உள்ள புது தாங்கள் ஏரியில் நேற்று முன்தினம் மாலை தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மை பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தாம்பரம் நகர பாஜக தலைவர் கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், நிர்மல் குமார், செங்கல்பட்டு மாவட்டம் பாஜ தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக முல்லை நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதி முழுவதும் தாம்பரம் நகர பாஜக சார்பில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, ஆங்காங்கே கட்சிக் கொடிகள், அலங்கார விளக்குகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று முல்லை நகர் பிரதான சாலையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களில் மர்ம நபர்கள் சாணி அடித்திருந்தனர்.