சென்னை: கடந்த 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யஸ்ரீ ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று சிபிசிஐடி போலீசார் மாணவி கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புப்பகுதிகளில் முதற்கட்டமாக விசாரணையைத் தொடங்கினர்.
இந்தநிலையில் கொலையாளி சதீஷ் இதற்கு முன்பும் மாணவிக்கு கொடுத்த துன்புறுத்தல்கள் குறித்து மாம்பலம் மற்றும் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மாணவி சத்யஸ்ரீயை சதீஷ் தாக்கியதாக, அவரது தாயார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பரங்கிமலை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் இரு தரப்பினரிடமும் போலீசார் எழுதி, வாங்கிக்கொண்டு சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் காவல் நிலையங்களில் விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டு காவல் நிலையங்களிலும் இதற்கு முன் அளிக்கப்பட்ட புகாரின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் இரண்டு காவல் நிலையத்திலும் கொடுக்கப்பட்ட புகார், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் விசாரணை இந்த நிலையில் இரு காவல் நிலையங்களிலும் சத்யஸ்ரீ சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை அலுவலர்களிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷை, சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார் காவல் நிலையங்களில் விசாரணை இதையும் படிங்க:ஓடும் ரயிலில் இருந்து சக பயணியை தள்ளிவிட்டு கொடூரம்