மதுரை:பாண்டியன் நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர், முருகானந்தம். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று(ஏப்.20) அதிகாலை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள கடையின் வாசலில் தலையில் பலத்த காயத்துடன் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்துள்ளார்.
மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு இளைஞர் படுகொலை - போலீசார் விசாரணை உடனே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலை காவல் துறையினர், இறந்து கிடந்த முருகானந்தம் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நண்பர்களுடன் இரவு மது அருந்தியதில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் நடைபெற்று, அது தகராறில் முடிந்துள்ளது. இதில் உடன் வந்தவர்கள் முருகானந்தத்தின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர் எனத்தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொதுத்துறை வங்கியில் ரூ.74 லட்சம் மோசடி... ஆடம்பர வாழ்க்கை வாழ ஊழியர்கள் நூதனம்...