சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கல்லியம்மன் நகரில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை ஆய்வாளர் ராஜ்குமார் மடக்கினார். இருவரும் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இருவரையும் விரட்டிச்சென்ற காவலர்கள் ஒரு வழியாக ஒருவரை பிடித்துவிட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். விசாரணையில், பிடிபட்ட நபர் பம்மல் பகுதியைச் சேர்ந்த பம்மல் சத்யா(23), என்பதும் இவர் மீது நான்கு கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்தது.