தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

முதலமைச்சர் சுவரொட்டி மீது சேற்றை பூசியது யார்? - crime news

வாணியம்பாடியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுவரொட்டி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சேற்றை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Jul 25, 2021, 6:08 AM IST

திருப்பத்தூர்: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வாணியம்பாடியில், நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் பொருத்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சேற்றை பூசியிருந்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம், நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி உள்பட காவல்துறையினர் சென்றனர். பின்னர் விசாரணை நடத்தி சுவரொட்டிமீது வீசப்பட்டு இருந்த சேற்றை தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார், திமுகவினர் அங்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சேற்றை பூசியது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details