சித்தி: மத்தியப் பிரதேசம் சித்தி மாவட்டத்தில் உள்ள உமாரிஹா கிராமத்தில் 45 வயது பெண் ஒருவர் தனது மகனுடன் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) காலை 11 மணிக்கு திருடன் ஒருவன் நுழைந்தான்.
பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த ஆணின் உறுப்பை துண்டித்த பெண்! - மத்தியப் பிரதேசம்
பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த திருடனின் ஆணுறுப்பை பெண் ஒருவர் துண்டித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
அந்நேரத்தில் பெண்ணின் கணவரும் வீட்டில் இல்லை. அவர் வேலையொன்றிற்காக வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில் தனியாக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ய திருடன் முயற்சித்தான். இந்நிலையில், இருவருக்கும் இடையே சுமார் 20 நிமிட போராட்டம் நடந்துள்ளது.
அப்போது, தன்னை பாதுகாத்துக்கொள்ள கட்டிலின் அடியில் இருந்த அரிவாளை எடுத்து, திருடனின் ஆண் குறியை துண்டித்தார். இதனால், வலியால் துடித்த திருடன் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினான். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்தார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 327 (காயம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.