தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

எங்கள் தற்கொலைக்கு 3 பேர்தான் காரணம்: தாய், மகன் விஷமருந்தி தற்கொலை முயற்சி - தாய், மகன் விஷமருந்தி தற்கொலை முயற்சி

சென்னை: கொடுங்கையூரில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலைக்கு முயன்றதில் மகன் உயிரிழந்தார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

suicide
suicide

By

Published : Feb 17, 2021, 8:01 AM IST

சென்னை கொடுங்கையூர் சின்ன பாப்பம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ் (54). இவர் அதே பகுதியில் மருந்துக் கடை வைத்துள்ளார். இவரது தாயார் மரியம்மாள் (82). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்துவருகின்றனர். ஜான் தாமஸின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் வழக்கமாக காலையில் எழுந்து ஜான் தாமஸ் வீட்டை விட்டு வெளியே வந்து மற்றவருடன் பேசிக்கொண்டு இருப்பார். நேற்று வெகு நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜான் தாமஸ் வீட்டின் கதவைத் தட்டினர். வெகு நேரமாகியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு கட்டிலில் ஜான் தாமஸ், அவரது தாய் மரியம்மாள் ஆகியோர் மயக்கநிலையில் இருந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஜான் தாமஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்பு மயக்கநிலையில் இருந்த மாரியம்மாள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் காவல் துறையினர், ஜான் தாமஸ் வீட்டை சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், "எங்களது மரணத்திற்கு காரணம் மூன்று பேர்தான்.

எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர். இதனால்தான் நாங்கள் மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

காவல் துறையிடம் சிக்கிய கடிதம்

அக்கடிதத்தைக் கைப்பற்றி ஜான் தாமஸ் குறிப்பிட்ட மூன்று நபர்கள் யார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற கோணத்தில் காவல் துறை விசாரித்துவருகிறது.

இதையும் படிங்க:கணவரின் சகோதரனை சுமக்க வைத்து பெண்ணிற்கு தண்டனை: உறவினர்கள் அட்டூழியம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details