தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

அப்டேட் இல்லையென்றால் வங்கிக்கணக்கு முடக்கம் என்னும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள் - காவல் துறை எச்சரிக்கை

பத்து நிமிடங்களில் அப்டேட் செய்யவில்லை என்றால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரக்கூடிய மெசேஜ் லிங்கைத் தொட வேண்டாம் என சென்னை காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை
காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By

Published : Jul 25, 2021, 9:26 AM IST

சென்னை: சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலமாக வருவதுபோல், ஒரு லிங்க் குறுஞ்செய்தி அனைத்து செல்போன் எண்ணிற்கும் வருகிறது.

அந்த குறுஞ்செய்தியில், இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி, உங்களது கேஒய்சி (Kyc), பான் கார்டு எண் (Pan card), ஆதார் எண்(Aadhar card) விவரங்களைப் பதிவிட வேண்டும். இல்லையென்றால், உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இதனை நம்பி பொதுமக்கள் பலர் அந்த லிங்க் மூலமாக, தங்களது விவரங்களைப் பதிவு செய்வதாகவும், அந்த சமயத்தில் அதாவது 2-3 நிமிடங்களில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கின் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல் திருடி, உடனடியாக ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மூலமாகவும் பணத்தைத் திருடி வருகின்றனர்.

இந்நிலையில், இது போல் வரக்கூடிய மெசேஜை பொதுமக்கள் ஒருவரும் நம்பவேண்டாம் எனவும்; வங்கியிலிருந்து இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் எனவும் சென்னை காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ஆபாச படங்கள் பார்ப்போரை குறிவைத்து ரூ.34 லட்சம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details