நீலகிரி மையப்பகுதியில் தினசரி நகராட்சி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1,700-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவன் முகமூடி அணிந்து, கையில் பட்டா கத்தி, ஆயுதங்களுடன் தினசரி நகராட்சி சந்தையில் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். இன்று அதிகாலை வழக்கம் போல் தங்களது கடைகளைத்திறக்க கடை வியாபாரிகள் வந்துள்ளனர். அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நீலகிரி காய்கறிச்சந்தையில் நள்ளிரவில் திருட்டு உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. தொடர்ந்து பள்ளிவாசல் உண்டியல் மற்றும் அருகில் உள்ள மொத்தம் 15 கடைகளில் இந்த குற்றச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பணம் மற்றும் பொருட்கள் எந்த அளவிற்கு திருடப்பட்டு உள்ளது, யார் யார் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடி... திடுக்கிடும் பின்னணி...