கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பலர் தங்களின் வேலையை இழந்தனர். அவ்வாறு வேலையிழந்த பெங்களுரூவைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஒருவர், தான் வாங்கிய கடனுக்காகச் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரோனா ஊரடங்கு அவலம் - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி! - எம்பிஏ பட்டதாரி செயின் பறி
பெங்களுரூ: தன்னுடைய கடனை அடைப்பதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
MBA Graduate opts Chain snatching to clear debts
பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட அவரை பிடித்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் ஷேக் கவுஸ் பாஷா என்பதும், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார் என்பதும் தெரியவந்தது.
ஊரடங்கு காரணமாக வேலையிழந்த அவர், 35 ஆயிரம் கடனை திருப்பி செலுத்துவதற்காகப் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். செயின் பறிப்பில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி மீது ஜெயநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.