தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிறுமியை காதலித்து ஏமாற்றிய கட்டட தொழிலாளி; பாய்ந்தது போக்சோ!

பள்ளி மாணவியை காதலால் வீழ்த்தி, திருமணம் செய்வதாகக் கடத்தி சென்ற கட்டடத் தொழிலாளியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

ஈரோடு செய்திகள்
mason arrested in pocso

By

Published : Apr 23, 2021, 9:24 AM IST

ஈரோடு: காதல் வலையில் பள்ளி மாணவியை வீழ்த்திய கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாம்பல்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சிதம்பரம்(26). இவர் செண்பகபுதூர் பகுதியில் கட்டட வேலை செய்துவந்தார். அப்போது அங்குள்ள 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் பிப்ரவரி மாதம் பள்ளி சென்ற மாணவி மாயமாகியுள்ளார்.

சிக்கிய மாணவி

மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சிறுமி தொழிலாளி சிதம்பரத்துடன் பெங்களூரிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தன்னை காவல் துறையினர் நெருங்குவதை உணர்ந்த சிதம்பரம், கிருஷ்ணகிரியில் உள்ள பெண்ணின் உறவினர் வீட்டில் மாணவியை ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து மாணவியைக் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் உறவினர்கள் முன்னிறுத்தியுள்ளனர்.

போக்சோவில் கைது

உடனடியாக சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரிக்கு விரைந்த அவர்கள் மாணவியை மீட்டு அழைத்து வந்தனர். தொடர்ந்து மாணவியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மாணவி 18 வயது நிரம்பாதவர் என்பதால், அவர் கூறிய தகவல்களைக் கொண்டு சிதம்பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details