கோவை: கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த இரு நபர்களில் ஒருவரான ஷாரிக் என்பவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் சென்று வந்தது தெரிய வந்தது.
மேலும் போலியான ஆதார் எண்கள் மற்றும் போலியான பெயர்களில் அவர் விடுதிகளில் தங்குவதும், whatsapp எண்களை பயன்படுத்துவதுமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணின் பெயரை பிரேம் ராஜ் என்ற பெயரில் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. கௌரி அருண்குமார் என்ற பெயரில் கோவை விடுதியில் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.